Tuesday, August 9, 2011

சமச்சீர் கல்வி

சமச்சீர் கல்விதான் தர வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு (09/08/2011) வழங்கி விட்டது. இது பற்றிய சர்ச்சைக்கு தீர்வு அளிக்கப்பட்டுவிட்டது. இனி மாணவர்களும் ஆசிரியர்களும் நிம்மதியாக கல்விப்பணியை பார்க்கலாம். கல்வி தரமானத அல்லது தரமற்றதா என்பதை வரும் காலங்கள்தான் முடிவு செய்யவேண்டும். IIM, IIT போன்ற கல்வி கூடங்கள் நடத்தும் தேர்வுகளில் பங்கு பெற்று தேர்ச்சி பெற முடியாத நிலை அரசு கல்வி நிலையங்களில் படித்த மாணவர்களுக்கு இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில் சமச்சீர் கல்வி என்ற போர்வையில் அரசு பள்ளிகளின் நிலைமை விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது. இனி தமிழக மாணவர்கள் எப்படி செயல் பட போகிறார்கள் என்பது போக போகத்தான் தெரியும். 

இந்த சமச்சீர் கல்வி குளறுபடியில் இரண்டு விஷயங்கள் நாம் கவனத்தில் கொள்ளத்தக்கது. ஒன்று ஜெயலலிதா அரசு காட்டிய முதிர்ச்சி மற்றது நீதி மன்றங்களின் செயல்பாடுகள்.

1. சமச்சீர் கல்வி குறித்து எந்த ஒரு தீர்ப்பு வந்தாலும் அதை நிறைவேற்றுவோம் என்று சட்டசபையில் ஒரு நாள் முன்னதாகவே அறிவித்து, தீர்ப்பு வெளிவந்தவுடன் அதை மறுபடியும் கூறிய ஜெயலலிதாவின் உறுதியும் தைரியமும் பாராட்டத்தக்கது. அவர் வேண்டுமானால் பிடிவாதம் பிடித்திருக்கலாம். உச்ச நீதி மன்ற தீர்ப்பை புறம் தள்ளி சட்டசபையில் புதிய சட்டம் நிறைவேற்றியிருக்கலாம். இதற்கெல்லாம் ஏற்கெனவே நிறைய முன்னுதாரணங்கள் உள்ளன. முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசு உச்சநீதி மன்ற தீர்ப்பை செயல் படுத்தாமல் புதிய சட்டம் இயற்றியது. காவிரி நதி நீர் பிரச்சனையிலும் கர்நாடக அரசு இப்படித்தான் செய்தது. இட ஒதுக்கீட்டு தீர்ப்பிலும் தமிழக அரசும் இதே கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. முன்னுதாரணங்கள் இப்படி இருக்கும் நிலையில் ஜெயலலிதாவின் தமிழக அரசு அந்த பாதையை மேற்கொள்ளாமல் தீர்ப்பை நடைமுறை படுத்தும் முடிவை மேற்கொண்டுள்ளது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. தன்னுடைய அரசு தவறு என்று நினைக்கும் ஒரு விஷயத்தை புறம்தள்ள நினைத்தது. அதில் சட்டப்படி தீர்வு காண நினைத்து அதற்குண்டான அனைத்து வழிகளையும் சந்தித்தது. கடைசியில் நிலைமை இதுதான் என்று தீர்மானமானபின் அதை பின்பற்ற முடிவு செய்துள்ளது. இதில் குற்றம் காண்பதற்கு ஒன்றுமில்லை. இரண்டு மாதங்கள் பிள்ளைகளின் படிப்பு வீணானது என்று கருதுவோரின் கவனத்திற்கு: 1985 - ல் ஆசிரியர்கள் சுமார் 47 நாட்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். அப்பொழுது மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது. 1987 - ல் மரம்வெட்டியார் செய்த மறியல் காரணமாக எண்ணற்ற பள்ளிக்கூடங்கள் இயங்காமல் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது. இத்தகையோர்தான் இன்று மாணவர்களின் படிப்பைப்பற்றி பெரும் அக்கறை கொண்டிருக்கிறார்கள்.

2. நீதிமன்றங்கள் அரசின் கொள்கை முடிவுகளில் எப்படி தலையிடுகின்றன என்பது புரியவில்லை. முந்தைய அரசின் கொள்கை முடிவு தற்போதைய அரசுக்கு ஏற்புடையதாக இல்லை எனும்போது அதை அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு மாற்றுவது அந்த அரசின் தலையாய பணியாகிறது. அத்தகைய வாக்குறுதிகளை கொடுத்தே அவர்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இதை தவறு என்று எப்படி கூற முடியும். காங்கிரஸ் ஆட்சியின்போது மும்மொழிக்கொள்கையுடைய தமிழகம் கழகங்களின் ஆட்சியில் இருமொழி கொள்கைக்கு மாறியது. இதை தவறு என்று கூறி மும்மொழி கொள்கையே தொடர வேண்டும் என்று எப்படி கூற முடியும். கொள்கை முடிவுகள் அரசியலமைப்பு சட்டத்திற்கு புறமாகாதவரை அதை தவறென்று கூற முடியாது. சமச்சீர் விஷயத்தில் நீதி மன்றங்கள் செய்திருப்பது இதுதான்.

3. கருணாநிதியின் சிறுபிள்ளைத்தனத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில்  மேல்முறையீடு செய்ய இருந்த நிலையில் 'தமிழக அரசு அடம் பிடிக்கக்கூடாது, இதில் யாருக்கும் வெற்றி தோல்வி இல்லை' என்றெல்லாம் உபதேசித்த கருணாநிதி, இன்று உச்சநீதி மன்ற தீர்ப்பை கொண்டாடுவோம் என்று அறிக்கை விதித்திருப்பது கீழ்த்தனமானது மற்றும் கண்டிக்கத்தக்கது. (வட்டம், மாவட்டங்கள் எல்லாம் ஒருவர் பின் ஒருவராக சிறைக்கு அணிவகுத்த நிலையில் கொண்டாட அங்கே யார் இருக்கிறார்கள் என்பது வேறு கதை) தங்கள் வீட்டு வாரிசுகளை இந்த சமச்சீர் திட்டத்தில் படிக்க வைத்து விட்டு இவர் கொண்டாடட்டும். ஏற்கெனெவே இந்தி ஒழிப்பு என்று ஒரு தலைமுறையையே தீர்த்து கட்டிய இவர்கள் இன்று சமச்சீர் என்ற பெயரில் தமிழினத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறார்கள். இதைத்தான் கொண்டாட சொல்லியிருக்கிறார் போலும். 

1 comment:

  1. Sundarraman ,
    "inninaliyil samacheer kalvi enra porvayil arasu palikalin nilamai visthirikkapattirukkirathu. Ini thamizhaga maanavargal eppadi seyalpadapokiraarkal ena poga poga thaan theriyum" This is your comment at the end of the first para.
    Now look at the penultimate line of the last para" evargal inru samacheer enra peyaril thazizhenathin ethirkaalatheye kelvikuriyaaki irukkiraarkal"

    POGA POGA THAAN THERIYUM ENU SOLLITU LAST LE KELVIKURI AAKITAANGUNU ANSWER KURI THAREENGALA ITHU SARIYAA??

    Now some excerpts from the Supreme Court's judgement:-

    "Uniform education system would achieve the code of common culture, removal of disparity , depletion of discriminatory values in human relations. It would enhance the virtues and improve the quality of human life , elevate the thoughts which advance our constitutional philosophy of equal society. In future , it may prove to be a basic preparation for uniform civil code as it may help in diminishing opportunities in those who foment fanatic and fissiparous tendencies."

    The Bench quoting a catena of decisions held that unless it was found that the act done by the authority earlier in existence was either contrary to statutory provisions , was unreasonable or was against public interest the state should not change its stand merely because the other political party had come to power. Political agenda of an individual or a political party should not be subversive of rule of law".

    "Bringing in legislation to in order to nullify a judgement of a competent court would amount to trenching upon the judicial power and no legislation is permissible which is meant to set aside the result of the mandamus issued by a court even though the amending statute may not mention such an objection. The rights embodied in a judgement cannot be taken away by the legislature indirectly."
    "If 1.20 crore students are now to revert to the multiple syllabus with the syllabus and textbooks applicable prior to 2010 after the academic term of 2010-12 has begun , they would be utterly confused and would be put to enormous stress. Students cannot be put to so much strain and stress unnecessarily. The entire exercise by the government is therefore arbitrary, discriminatory and oppressive to students, teachers and parents"....

    "Passing the Act (Repealing Act of 2011) amounts to nullifying the effect of the High court and this courts's judgements and such an act simply tantamounts to subversion of law."

    Pillaikalin kalvi baathipai patri kavalai padupavargal arasiyil katchikaarargal alla Supreme Court needhipathigal.....dear friend...

    Courtesy:- The Hindu dated 10-August 2011

    ReplyDelete