இதற்கு காரணம் என்ன? ஜெயலலிதா என்ற தனிநபரை மக்களுக்கு பிடித்திருக்கிறது. அவர் அப்பழுக்கற்றவர் என்று மக்கள் நம்புகிறார்கள். அவர் எடுக்கும் துணிச்சலான முடிவுகள், தேசிய மற்றும் தமிழ் பற்று கொண்ட அவர் சிந்தனைகளை அவர்கள் ஆதரிக்கிறார்கள். இலங்கை, காவிரி, முல்லை பெரியாறு போன்ற தமிழகத்தை பாதிக்கும் பிரச்சனைகளில் அவரின் நிலைப்பாட்டை மக்கள் வரவேற்கிறார்கள். அவர் தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டுவார் என்று எதிர்பார்க்கிறார்கள். தமிழ்-தமிழ் என்று உதட்டளவில் பேசி ஊழலை வளர்த்து தமிழினத்தை காட்டி கொடுக்கும் கும்பல் போன்று அவர் துரோகம் இழைக்க மாட்டார் என்று மக்களுக்கு அவர் மீது அதீத நம்பிக்கை உள்ளது. தமிழர் நலன், எதிர்கால தமிழகத்தின் நன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டே அவர் சில தவிர்க்க முடியாத கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது என்று மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். துணிச்சலான, மற்றும் தைரியமான முடிவுகளை எடுப்பதில் ஜெயலலிதாவிற்கு இணை இல்லை என்று மக்கள் கருதுகிறார்கள். இவ்வளவு நம்பிக்கைகளுக்கு பிறகும் மக்கள் அவரை இரண்டு முறை சட்ட மன்ற தேர்தலில் தோற்கடித்திருக்கிறார்கள் என்பதற்கு காரணம், அவரை சுற்றி கருநாகம் போல் இறுக்கி கொடிருந்த சதி கார கும்பல்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இந்த கும்பல் மட்டும் இல்லாவிடில் ஜெயலலிதாவை வீழ்த்த எந்த சக்தியாலும் முடியாது, இனி அவர்தான் நிரந்தர முதல்வர் என்றெல்லாம் மக்கள் ஆங்காங்கே பேசிக்கொள்வது நம் காதுகளில் விழுகிறது.
- கருணாநிதி தமிழகத்தில் 1996 மற்றும் 2006 களில் முதல்வராக வந்திருக்க முடியாது. இவர் தயவில் எந்த ஒரு மத்திய அரசும் ஏற்பட்டிருக்காது.
- இவர் தயவில்லாத மத்திய அரசு தொலை தொடர்பு ஊழல் போன்ற பெரும் ஊழல்களை சந்தித்திருக்காது.
- பிரதமருக்கு கடிதம் எழுதியே காலத்தை தள்ளிய கருணாநிதி முதல்வராக இல்லை என்றால் எந்த ஒரு தமிழக மீனவனையும் இலங்கை படை கொன்றிருக்காது.
- தமிழனுக்கு ஆதரவாக செயல்படுகிறேன் என்று கூறிக்கொண்டே தமிழன் முதிகில் கருணாநிதி குத்தி இருக்க முடியாது. விடுதலை புலிகள் என்ற இயக்கம் இலங்கையில் முடிவுக்கு வந்திருக்காது. அங்கே எண்ணற்ற தமிழரால் வீடிழந்து அகதிகள் முகாமில் சிறைக்கைதிகள் போல் அவலப்படும் நிலை வந்திருக்காது.
- காவிரி நடுவர் நீதி மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கும். கருணாநிதி போன்ற ஒரு சுயநல முதல்வர் இங்கே இல்லை என்ற ஒரே காரணத்திற்காகவாவது கர்நாடக அரசு நமக்குரிய நீர் பங்கை தந்திருக்கும்.
- முல்லைப்பெரியாறு பிரச்சனையில் உச்ச நீதி மன்ற தீர்ப்பை மீறி கேரள சட்டசபையில் புதிய சட்டம் இயற்றி இருக்க மாட்டார்கள். புதிய அணை கட்டும் யோசனையே அவர்களுக்கு வந்திருக்காது. கருணாநிதி போல் அல்லாமல் ஜெயலலிதா எதுவும் செய்வார் என்கிற பயம் அவர்களுக்கு வந்திருக்கும். அத்தகைய புதிய அணைக்கட்டும் கேரள அரசின் கோரிக்கைக்கு எந்த ஒரு மத்திய அரசும் ஆய்வு செய்ய அனுமதி வழங்கி இருக்காது.
- பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசு முன் வந்திருக்காது.
- தனது குடும்ப உறுப்பினர்களின் நன்மை ஒன்றையே கருதி வாழ்ந்த கருணாநிதி சென்னையை சுற்றி மட்டுமே தொழிற்சாலைகளும், கட்டிடங்களும், மேம்பாலங்களும் ஏற்படுத்தி மற்றைய தமிழக பகுதிகளை புறக்கணித்திருக்க முடியாது.
மேற்கண்ட தீமைகள் தமிழகத்தில் படர ஜெயலலிதா மட்டுமே காரணம். அவர் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை இதுகாறும் கண்டு கொள்ளாமல் இருந்ததே தவறு. 1991 இல் திரு விஸ்வநாதன் எழுப்பிய அபாய ஒலி இன்றுதான் ஜெயலலிதா காதுகளில் விழுந்திருக்கிறது. தமிழகம் ஒரு இருபது வருட வளர்ச்சியை இழந்திருந்தாலும், இனிமேலும் அத்தகைய இழப்பு தவிர்க்க பட்டிருக்கிறதே என்று மகிழ்ச்சி கொள்வோம். இறைவனுக்கு நன்றி சொல்லுவோம்.
