இத்தகைய ஒரு அஹிம்சா போராட்டத்தை எப்படியெல்லாமோ கொச்சைப் படுத்தி ஒழித்துவிட இந்த அரசு முயற்ச்சிகளை செய்து வருகிறது. அண்ணாவையே ஊழல் பேர்வழி என்று முத்திரை குத்தினார்கள். இப்போது கிறித்தவ, இசுலாமிய சிறுபான்மை மக்களை தூண்டி அண்ணாவிற்கு எதிராக அறிக்கை விட வைத்திருக்கிறார்கள். புது தில்லியிலிருந்து இந்திய கத்தோலிக்க பிஷப்பு பேரவையும், அகில இந்திய இசுலாமிய தனிநபர் சட்ட வாரியமும், தாருல் உலூமும், ஜமைத் உளம் இ ஹிந்த் என்ற அமைப்பும் அண்ணாவின் போராட்டம் சட்ட விரோதம் என்று அறிக்கை விட்டிருக்கின்றன. இனவெறி, கலவரம், ரகளை, கல்லேரிப்பு, சாலை மறியல், பேருந்து எரிப்பு காயம், உயிரிழப்பு என்று ஒரு நவீன போராட்டத்திற்கான அறிகுறிகள் எதுவுமில்லாமல் ஒரு தனி மனிதன் போராடுவதா? என்று வயிற்றெரிச்சல் கொண்டு இவை அறிக்கை விட்டிருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது. இவர்களின் டிரேட் மார்க் போராட்டம் எப்படிப்பட்டது என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும்.
நரேந்திர மோடி தலைமையிலான குஜராத்தின் வளர்ச்சியை ஒரு இசுலாமிய நிறுவனத்தலைவர் புகழ்கிறார் என்பதற்காகவே அவரை தலைமை பதவியிலிருந்து தூக்கி எறிந்திருக்கிறார்களே அது ஜனநாயக முறையிலான செயல்தானா? இந்தியாவில் மக்கள் மத்தியில் பிளவையும், பீதியையும் உண்டுபண்ணவே எல்லைக்கப்பாலிருந்து சிறுபான்மை இனத்தை சார்ந்த சமூக விரோதிகள் கண்ட இடங்களிலெல்லாம் குண்டுவைத்து மக்களை கொன்று குவிக்கிறார்களே? அதை கண்டிக்க மனமுமில்லாமல், திராணியுமில்லாமல் வேடிக்கைப்பார்த்து கொண்டிருக்கும் இசுலாமிய அமைப்புகள் ஜனநாயக பாதையையா பின்பற்றுகின்றன?
இதே வார்த்தையை முன்னால் சபாநாயகர் திரு.சோம்நாத் சட்டர்ஜியும் தெரிவித்திருக்கிறார். இவர் பின்பற்றும் கம்யுனிச அமைப்புகள் பந்த் என்ற பெயரிலும், கடையடைப்பு, வேலைநிறுத்தம் என்ற பெயரிலும் கோடானுகோடி மக்களுக்கு இடையூறு விளைவித்தும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தும் செயல் படுகிறார்களே அது என்ன ஜனநாயக வழிமுறைதானா?
எந்த நாடாளுமன்றமும் தானாக ஒரு பணியை செய்யாது. ஆட்சி யிலிருப்பவரின் விருப்பப்படிதான் அது செயல்படும். யானைபாலம் வாய்ந்த பெரும்பான்மையை வைத்திருக்கும் ஆளும்கட்சி தலைவரின் விருப்பப்படிதான் நாடாளுமன்றத்தில் விவாதங்களோ, நடைமுறைகளோ இருக்கின்றன. அங்கே அவர்கள் விரும்பும் எண்ணங்களே சட்டமாக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட நடைமுறையையே மேற்கொள்ளுங்கள் என்று பெருபான்மை பெற்றுள்ள ஒரு பிரதமரை வற்புறுத்துவது எப்படி நாடாளுமன்ற நடைமுறையில் தலையிடுவதாகும்? நம்மையெல்லாம் முட்டாள்கள் என்று நினைத்துக்கொள்ள இந்த பிற்போக்கு அரசியல் வியாதிகளுக்கு உரிமை உள்ளதாகவே எடுத்துக்கொள்வோம். ஆனால் அவர்கள் தங்களையல்லவா முட்டாட்கள் என்று ஊர்ஜிதப்படுத்தி இருக்கிறார்கள்?
