Saturday, June 25, 2011

கொப்புளித்து விட்டது

முத்தமிழரிந்தவர் (அறிந்தவர் அல்ல அரிந்தவர்) சமீபத்தில் புதுதில்லி சென்று வந்தார். அங்கே சிறையில் வாடும் தம் மகளை கண்டு கண் கலங்கிய நிகழ்ச்சியை இங்கே சென்னையில் நினைவுகூறும்போது, "உடம்பெல்லாம் கொப்புளங்கள், வெயிலின் கொடுமையால் தழும்புகள், வீக்கங்கள்" என்று புலம்பி தீர்த்திருக்கிறார். பாவம்! ஒரு தகப்பனாரின் கவலை நமக்கென்ன தெரிய போகிறது. தம் மகள் துயருருகிறாள் எனும்போது தந்தையார் கவலை கொள்வது இயற்கைதானே? ஆனால் அவர் வெறும் தகப்பனார் மட்டுமில்லை. ஒரு கட்சியின் தலைவர். இதுகாறும் இந்த மாநிலத்தை ஆண்டவர். அவர் இப்படி ஊரறிய புலம்புவது கேவலம்.

தம் மகள் மட்டும் காயப்பட்டிருக்கிறாள் என்று இப்போது புலம்பும் இந்த பெரிய மனிதர், சுமார் ஐந்து மாதங்களாக தம் கட்சியை சார்ந்த மற்றொரு உறுப்பினரும் அதே வெயிலில் வாடிக்கொண்டிருக்கிறார் என்பதை ஏன் மறந்து போனார். அவருக்கு இது வரை இவர் கண்ணீர் விட்டதுண்டா. கட்சித்தலைவன் என்றால் எல்லோருக்கும் ஒரு மாதிரிதானே நடந்துக்கொள்ளவேண்டும். தம் மகளுக்கு ஒரு மாதிரியும் மற்றவருக்கு ஒரு மாதிரியும் ஏன் இப்படி புலம்ப வேண்டும். தம் மக்களுக்கு இது காரும் மூன்றும் முறை உயர்மட்டக்குழுவை கூட்டிய இவர் அந்த அப்பாவிக்கு ஒருமுறையேனும் அப்படி செய்தாரா? 

தினரகரன் அலுவலக எரிப்பு நிகழ்வில் மூன்று அப்பாவிகள் இறந்து போனார்களே? அந்த பெற்றோர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? ஒன்றுமே நடவாதது போல இவர்கள் குடும்பம் ஒன்று சேர்ந்து விட்டதே? பலியானவனின் குடும்பத்திற்கு யார் ஆறுதல் சொன்னார்கள். அவர்கள் மனமெல்லாம் இன்றுவரை கொப்புளங்களாகவும் காயங்களாகவும் இருக்கிறதே அதற்கு யார் மருந்து போட்டார்கள். இங்கே குடும்பத்தை விட்டு விட்டு அதே தில்லியில் சாதாரண கூலி தொழிலாளர்களாக எண்ணற்ற தமிழர்கள் சாலையோரத்தில் படுத்து கிடக்கிறார்கள். அவர்களின் கொப்புளங்களை இவர் என்றாவது நினைத்து பார்த்ததுண்டா? 

ஒரு கட்சித்தலைவனுக்கு இருக்க வேண்டிய தைரியம் துளிகூட இந்த மனிதரிடம் இருந்ததில்லை. இப்போது கோழை போல நாடு வீதியில் புலம்புகிறார். இவர் ஆட்சியின் போது ஜெயலலிதாவை இதை விட கேவலமாக நடத்தினாரே? அப்போது அந்த பெண்மணி இப்படியெல்லாம் புலம்பியதில்லையே? அதற்கு முன்பு சட்டசபையில் அவமரியாதை செய்த போது கூட அவர் கூப்பாடு போடவில்லை. மாறாக சவால் விட்டார். அத்தகைய தைரியத்துடன் காங்கிரசுக்கு சவால் விட முடியுமா இவரால். "கூடா நட்பு கேடாய் முடியும்" என்று சொன்னதை கூட காங்கிரசை எதிர்த்துதான் என்று சொல்ல கூட தெம்பில்லை இவருக்கு. இவர்களின் கொள்கை பிடிப்பையும் தைரியத்தையும் ஒட்டுமொத்த தமிழினம் தெரிந்துக்கொண்டு விட்டது. இனி அதுதான் அவருக்கு பெரும் கவலை.      

No comments:

Post a Comment