கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக அப்பகுதி மக்கள் சமீப காலமாக உண்ணாவிரதம், மறியல் என்று பல போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். இவர்களின் அச்சத்தை போக்கி உடனடி தீர்வு காண மத்திய மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றன. போராட்டக்காரர்களும் தங்களுடைய போராட்டத்தில் நேர்மையை தொலைத்து வருகிறார்கள். இதில் யாருடைய நிலை பாடும் பாராட்டும் விதமாக அமையவில்லை. சம்பந்தப்பட்டோர் அனைவருடைய நிலைபாட்டாலும் தமிழகம் மட்டுமே இழப்பை சந்திக்கும் என்பது திண்ணம்.
மன்மோகன் சிங் அரசு:
ஜெயலலிதா அரசு:
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதி:
போராட்டக்காரர்கள்:
போராட்டக்கார்கள் கூறும் காரணங்கள் வியப்புக்குரியதாகவும் அதே நேரத்தில் எள்ளிநகையாடும் விதமாகவும் இருக்கின்றன. தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை யும் அச்சத்தையும் போக்கும் விதமாக படித்த விவரம் அறிந்த வல்லுனர்களிடம் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டுமேயொழிய இப்படி நடுரோட்டில் அமர்ந்து போராட்டம் என்ற பெயரில் வளர்ச்சிப்பணிகளுக்கு முட்டுக்கட்டை போடக்கூடாது. இவர்களிடம் இன்று அரசு மண்டியிடுவதாக தோன்றலாம். ஆனால் அரசு இயந்திரம் என்பது 'கழுதை' போன்றது. எவ்வளவு பாரத்தையும் சுமக்கும் பொறுமை கொண்டது. ஆனால் அதற்கு சலிப்பு ஏற்பட்டு உதைவிட்டாலோ, கடித்து வைத்தாலோ அதை தாங்கும் திராணி யாரிடமும் இல்லை. இதை இவர்கள் உணர்ந்தபாடில்லை. ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியின் போது அணுவுலை ஒன்று செயலிழந்து, ஆபத்தை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டதை இவர்கள் உதாரணமாக கூறுகிறார்கள். அங்கே சுமார் பதினாறு பேருக்கு மேல் யாருக்கும் எந்த ஒரு பெரிய பாதிப்பும் ஏற்பட்டதாக செய்திகள் இல்லை. அதையும் இரவுப்பகல் பாராமல் விஞ்ஞானிகளும் தொழிலாளிகளும் பாடுபட்டு முடிவுக்கு கொண்டுவந்ததை இவர்கள் என் பார்க்க மறுக்கிறார்கள் என்பதுதான் நமக்கு விளங்கவில்லை. இவர்களுக்கு ஒன்று நமது விஞ்ஞானிகள் மீதும், தொழிலாளிகள் மீதும் நம்பிக்கை இல்லை அல்லது இவர்கள் வறட்டு பிடிவாதம் பிடிகிறார்கள் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. சுனாமி, நிலநடுக்கம், இடி, மின்னல், பெருவெள்ளம் போன்ற இயற்கைச்சீற்றங்கள் அவ்வப்போது ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கும். அவை எங்கே, எப்பொழுது, ஏற்படும் என்றோ அவ்வாறும் ஏற்படும்பொழுது நமக்கு என்ன வகையான இழப்புகளை ஏற்படுத்தும் என்றோ, அந்த இழப்புகளை சந்திக்கும் நிலையில் நாம் இருக்கிறோம் என்றோ யாராலும் அறுதியிட்டு கூற முடியாது. பொருளாதார மற்றும் விஞ்ஞான துறையில் நன்கு வளர்ச்சி பெற்ற நாடுகளே உறுதி கூறமுடியாத நிலையிலும் அவை அணுவுலை போன்ற வற்றை கையாண்டு வருவதை நாம் பார்க்கிறோம். அணுவுலை வெடித்துத்தான் நமக்கு முடிவு வரும் என்பதில்லை. அனுவுளையினால் ஏற்படும் ஆபத்தை விட இன்றைய நிலையில் நாம் பல ஆபத்துக்களை உடன் வைத்திருக்கிறோம். அவற்றையெல்லாம் உடனே நிறுத்தவேண்டும் அல்லது மூடிவிட வேண்டும் என்று கொடிபிடிக்கச்சொன்னால் இந்தியா மீண்டும் கற்காலத்திற்கே சென்று விடும் அவ்வளவே. உதாரணத்திற்கு சிலவற்றை பட்டியலிடுகிறோம். இவற்றை மூட நம்மிடம் தகுந்த காரணங்கள் உள்ளன.
1. திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர், சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் சாயப்பட்டறைகள் அதிகம். தமிழகத்தின் அந்நிய செலாவணியை கணிசமான அளவிற்கு உயர்த்திய பெருமை இந்த பட்டறைகளுக்கு உண்டு. அங்கே பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள் பணிபுரிகிறார்கள். அவர்களை நம்பி பல குடும்பங்கள் உள்ளன. தமிழகத்திற்கு பெருமை சேர்த்து இன்று இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல முன்னணி ஜவுளி உற்பத்தி கம்பெனிகளோடு போட்டிப்போட்டுக்கொண்டு முன்னேறி வரும் நிலையில் உள்ள இந்த சாயப்பட்டறைகளை மூடவேண்டும் என்று பெரும் போராட்டம் நடந்து வருகிறது. நீதிமன்றங்களும் தலையிட்டு கம்பெனிகளுக்கு சீல் வைத்த அவல நிலை கூட தோன்றிவிட்டது. இவர்கள் கூறும் காரணம் சாயக்கழிவுகள் நிலத்தடிநீர், ஆற்றுநீர், குளத்துநீர் என்று அனைத்தையும் மாசுபடுத்தி, மக்களின் சுகாதாரத்தில் பெருத்த பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. உண்மைதான். அதற்கு தீர்வாக கம்பெனிகளை மூடுவது சரியாகாது. அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பை யார் சரிகட்டுவது. சாயக்கழிவுகளை சுத்தப்படுத்தி ஆற்றில் விடவேண்டும் என்ற நடைமுறையை பல அரசுகள் கண்டுக்கொல்லாததே இந்த பரிதாப நிலைக்கு காரணமேயன்றி சாயப்பட்டரைகளினால்தான் மக்களுக்கு பாதுகாப்பற்ற தன்மை தோன்றிவிட்டது என்று புலம்புவது பத்தாம் பசலித்தனம்.
2. இன்று அசுரவளர்ச்சியை சந்தித்துவருவது தொலைத்தொடர்புத்துரைதான். யார் கையிலும் செல்போன்கள் (கைப்பேசி என்று கூறுவது சரியல்ல) காணப்படும் இந்த காலத்தில் செல்போன் கம்பெனிகளை மூட வேண்டும் என்பதற்கு பல காரணங்களைக் கூறலாம். மக்களின் வசிப்பிடத்திலிருந்து சுமார் நூறு மீட்டர் தூரத்தில்தான் செல்போன் கோபுரங்களை அமைக்க வேண்டும் என்பது விதி. அத்தகைய கோபுரங்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் மக்களின் மன நிலையையும், உடல் நிலையையும் பாதிக்கின்றன. ஆண்மை, பெண்மை குறைபாடு போன்ற பல பிரச்சனைகளை வமிசம் முழுமைக்கும் ஏற்படுத்தும் அபாயத்தை அவை சுமந்திருக்கின்றன. இதனால்தான் இந்த விதி இருக்கிறது. ஆனால் இன்று ஒவ்வொரு வீட்டின் மீதும் செல்போன் கோபுரத்தை காண்கிறோம். பள்ளிகள், மருத்துவமனைகள், அடர்ந்த குடியிருப்புகள் என்று எங்கே நோக்கினும் கொபுரங்கல்தான். இவற்றின் கதிர்வீச்சு அபாயத்தை மக்கள் சுமந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அணுவுலை கதிர்வீச்சு அளவுக்கு அபாயத்தை தரும் இந்த செல்போன் கோபுரங்களை மக்கள் அனுதினமும் நடைமுறையில் சந்தித்துத்தான் வருகிறார்கள். அரசின் விதிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு கோபுரங்களை அமைத்து மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் இந்த செல்போன் கம்பெனிகளை மூட வேண்டும் என்று யாரும் போராட முன்வருவதில்லை.
3. சாலை, ரயில் விமான போக்குவரத்து என்று அனைத்திலும் பாதிப்பையும், சவால்களையும் நாம் சந்தித்துக்கொண்டுதான் வருகிறோம். உலகில் மற்ற எந்த துறையிலும் ஏற்படாத அளவிற்கு உயிரிழப்பு சாலை விபத்துக்களில்தான் ஏற்படுகின்றது. போர்காலங்களில் கூட இத்தகைய சேதாரம் ஏற்படுமா என்பது கேள்விக்குறிதான். ரயில் ஓட்டுனர், விமான ஓட்டிகள் போன்றோரின் கவனக்குறைவினாலும், இயந்திரக் கோளாறுகளாலும் ஆண்டுதோறும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டவண்ணம் இருக்கின்றன. அவ்வப்போது விமானங்கள் குடியிருப்புப்பகுதியில் விழுந்து அங்கே வீடுகளுக்கும் மக்களுக்கும் இழப்பையும் ஏற்படுத்துகின்றன. இத்தகைய காரணங்களால் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்தை முடக்கலாம். ஆனால் அவ்வாறு கோருவது. அறியாமை. அவற்றில் உள்ள குறைகளை களைந்து, பாதுகாப்பு உக்திகளை பலப்படுத்த வேண்டுமே அன்றி அவற்றை புறக்கணிக்க கூடாது.
4. சுனாமி ஏற்படும்பொழுது இந்த அணுவுலைகள் வெடித்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற பீதியை அளவுக்கு அதிகமாக பரப்பியதைத்தவிர இவர்கள் வேறு நல்ல காரணங்களை சொல்லவில்லை. இன்றைக்கும் சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட கடற்கரையை கொண்டிருக்கும் தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்கள் கடற்கரையையே தங்கள் வாழ்விடமாகவும் வாழ்வாதாரமாகவும் கொண்டிருக்கிறார்கள். சுனாமி வரும் பொழுதும் பூகம்பம் வரும்பொழுதும் இந்த எண்ணற்ற மக்களும் பாதிப்பை சந்திக்க வேண்டி வரும். இவர்களையெல்லாம் கடற்கரையோரம் குடியிருக்கதீர்கள், கடலை நம்பி தொழில் செய்யாதீர்கள் என்றெல்லாம் தடுக்க முடியுமா. அவ்வாறு செய்வது அறியாமையன்றோ? அவ்வளவு ஏன். இன்றைக்கு போராட்டத்தில் முன்னணியில் நிற்கும் பாதிரியார்களை பார்த்து கேட்கிறோம்: கடற்கரையோரம் கட்டப்பட்ட எண்ணற்ற தேவாலயங்களைஎல்லாம் அப்புறப்படுத்தலாமே! அங்கே தேவாலயங்கள் இருப்பதால்தான் மக்கள் பிரார்த்தனைக்காக வருகிறார்கள். அப்போது சுனாமி ஏற்பட்டால் அவர்கள் எல்லாம் பாதிக்கப்படுவார்களே. அத்தகைய பாதிப்பை சந்திக்க மக்களை வரவேற்கும் இந்த தேவாலயங்களை கடற்கரைப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தவேண்டும் என்று கோரிக்கை வைக்கலாம் அல்லவா? இது என்னவிதத்தில் அநியாயமான கோரிக்கையோ அத்தகையதே கூடங்குளம் கோரிக்கையும். சமீபத்திய சுனாமியின் தாக்குதல், எங்கெங்கெல்லாம் தேவாலயங்கள் இருக்கின்றனவோ அங்கெங்கெல்லாம் பயங்கர இழப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
5. மாற்று எரிசக்தி ஏற்பாட்டை செய்யுங்கள் என்று போராட்டக்காரர்கள் மின்சார தீர்வாக கூறுவது விந்தைதான். அந்த மாற்று ஏற்பாடுகளில் எல்லாம் பாதுகாப்பு குறைபாடுகள் இல்லை என்பது போல் உள்ளது அவர்கள் கூறும் யோசனை. நிலக்கரிச்சுரங்கங்களில் எத்தகைய அபாயம் உள்ளது என்பது அவர்கள் அறிந்திருக்கவில்லையா? அங்கே பணி செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை தோற்றுவிப்பதோடு, பூமியை கண்டபடி குடைந்து செல்வதால் அந்த பகுதிகளில் மண்சரிவு, பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகள் கூட உருவாக காரணமாக அமைந்து விடுகின்றன. அனல் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து வெளிப்படும் நிலக்கரி பதிவுகள் அந்த சுற்றுவட்டாரத்தையே மாசுபடுத்துவதோடு, நுரையீரல் சம்பந்தப்பட்ட பல நோய்களை மக்களுக்கு அளிக்கின்றன. இது போன்ற காரணங்களினால் அனல் மின் உற்பத்தியை நாம் தவிர்க்கத்தா வேண்டும். காற்றாலை மின் உற்பத்தி நம்முடைய தேவைகளுக்கு ஈடாக அமைய வில்லை. தவிர கடந்த இரண்டு ஆண்டுகளாக காற்று சரிவர வீசாததால் மின் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய காரணங்களினால் இவர்கள் கூறு மாற்று யோசனை பலனளிக்காது.
மேற்கூறிய காரணங்கள் எத்தகைய வகையில் நியாயமோ அந்த அளவிற்கு இவர்களின் போராட்டத்திலும் அநியாயம் உள்ளது. பாதுகாப்பை பலபடுத்துங்கள், எங்கள் அச்சத்தை போக்குங்கள், பாதிப்பு ஏற்படுமாயின் எங்களுக்கு வழங்கும் இழப்பீட்டை அதிகப்படுத்துங்கள், எங்கள் பகுதி மேம்பட வாய்ப்பளியுங்கள், எங்கள் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குங்கள் என்று கோரிக்கை வருமாயின் அது நியாயமே. ஆனால் இல்லாத காரணத்தை கற்பனையாக உருவாக்கி அதற்கு மக்களை படைதிரட்டி போராடி அணு உலையையே மூடு என்பது எந்தவிதத்தில் நியாயம் என்பது படித்த சுயசிந்தனையுள்ள யாவரும் உணர்ந்துள்ளனர். இதில் இன்னுமொரு செய்தி கவனிக்கத்தக்கது. குழந்தைகளை எல்லாம் இந்த போராட்டத்தில் ஈடுபடுத்துகிறார்கள். நன்கு வளர்ந்துவிட்ட நமக்கே சிந்திக்கவும் பிரச்னையை புரிந்துக்கொள்ளவும் திராணியில்லாத பொழுது, அந்த பிஞ்சு உள்ளங்களுக்கு என்னத்தெரியும்? இவர்கள் குழந்தைகளின் நெஞ்சில் நஞ்சை விதைப்பதோடு, அவர்களை போராட்டம் என்ற பெயரில் கொடுமைப்படுத்துகிறார்கள். இதை தவிர்க்க இயலும்.
நம் தலைவிதி! என்ன நடக்குமோ?
யாருக்குமே தேசத்தின் மீதோ, தேச வளர்ச்சியிலோ அக்கறையில்லாமல் செயல் படுவதை பார்க்கும்போது அந்நிய சக்தி ஏதேனும் இவர்களை பின்னிருந்து இயக்குகிறதா என்கிற சந்தேகம் வலுக்கிறது. அதற்கு இடம் கொடாமல் சம்பந்தப்பட்டவர்கள் நடந்துக்கொண்டால் நன்மையளிக்கும். அவர்களுக்கு தெரியாத தொன்றுமில்லை. நாம் சொல்லித்தெரிந்துக் கொள்ளும் நிலையிலும் அவர்கள் இல்லை. என்ன செய்வது? காலம் வலிமை வாய்ந்தது. இன்று பலம் பொருந்தியவனாக தோற்றமளிக்கும் ஒருவனை நாளைக்கு ஒப்புக்குச் சப்பாணியாக, செல்லாக்காசாக்கும் வன்மை படைத்தது. இதை நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.
4. சுனாமி ஏற்படும்பொழுது இந்த அணுவுலைகள் வெடித்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற பீதியை அளவுக்கு அதிகமாக பரப்பியதைத்தவிர இவர்கள் வேறு நல்ல காரணங்களை சொல்லவில்லை. இன்றைக்கும் சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட கடற்கரையை கொண்டிருக்கும் தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்கள் கடற்கரையையே தங்கள் வாழ்விடமாகவும் வாழ்வாதாரமாகவும் கொண்டிருக்கிறார்கள். சுனாமி வரும் பொழுதும் பூகம்பம் வரும்பொழுதும் இந்த எண்ணற்ற மக்களும் பாதிப்பை சந்திக்க வேண்டி வரும். இவர்களையெல்லாம் கடற்கரையோரம் குடியிருக்கதீர்கள், கடலை நம்பி தொழில் செய்யாதீர்கள் என்றெல்லாம் தடுக்க முடியுமா. அவ்வாறு செய்வது அறியாமையன்றோ? அவ்வளவு ஏன். இன்றைக்கு போராட்டத்தில் முன்னணியில் நிற்கும் பாதிரியார்களை பார்த்து கேட்கிறோம்: கடற்கரையோரம் கட்டப்பட்ட எண்ணற்ற தேவாலயங்களைஎல்லாம் அப்புறப்படுத்தலாமே! அங்கே தேவாலயங்கள் இருப்பதால்தான் மக்கள் பிரார்த்தனைக்காக வருகிறார்கள். அப்போது சுனாமி ஏற்பட்டால் அவர்கள் எல்லாம் பாதிக்கப்படுவார்களே. அத்தகைய பாதிப்பை சந்திக்க மக்களை வரவேற்கும் இந்த தேவாலயங்களை கடற்கரைப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தவேண்டும் என்று கோரிக்கை வைக்கலாம் அல்லவா? இது என்னவிதத்தில் அநியாயமான கோரிக்கையோ அத்தகையதே கூடங்குளம் கோரிக்கையும். சமீபத்திய சுனாமியின் தாக்குதல், எங்கெங்கெல்லாம் தேவாலயங்கள் இருக்கின்றனவோ அங்கெங்கெல்லாம் பயங்கர இழப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
5. மாற்று எரிசக்தி ஏற்பாட்டை செய்யுங்கள் என்று போராட்டக்காரர்கள் மின்சார தீர்வாக கூறுவது விந்தைதான். அந்த மாற்று ஏற்பாடுகளில் எல்லாம் பாதுகாப்பு குறைபாடுகள் இல்லை என்பது போல் உள்ளது அவர்கள் கூறும் யோசனை. நிலக்கரிச்சுரங்கங்களில் எத்தகைய அபாயம் உள்ளது என்பது அவர்கள் அறிந்திருக்கவில்லையா? அங்கே பணி செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை தோற்றுவிப்பதோடு, பூமியை கண்டபடி குடைந்து செல்வதால் அந்த பகுதிகளில் மண்சரிவு, பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகள் கூட உருவாக காரணமாக அமைந்து விடுகின்றன. அனல் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து வெளிப்படும் நிலக்கரி பதிவுகள் அந்த சுற்றுவட்டாரத்தையே மாசுபடுத்துவதோடு, நுரையீரல் சம்பந்தப்பட்ட பல நோய்களை மக்களுக்கு அளிக்கின்றன. இது போன்ற காரணங்களினால் அனல் மின் உற்பத்தியை நாம் தவிர்க்கத்தா வேண்டும். காற்றாலை மின் உற்பத்தி நம்முடைய தேவைகளுக்கு ஈடாக அமைய வில்லை. தவிர கடந்த இரண்டு ஆண்டுகளாக காற்று சரிவர வீசாததால் மின் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய காரணங்களினால் இவர்கள் கூறு மாற்று யோசனை பலனளிக்காது.
மேற்கூறிய காரணங்கள் எத்தகைய வகையில் நியாயமோ அந்த அளவிற்கு இவர்களின் போராட்டத்திலும் அநியாயம் உள்ளது. பாதுகாப்பை பலபடுத்துங்கள், எங்கள் அச்சத்தை போக்குங்கள், பாதிப்பு ஏற்படுமாயின் எங்களுக்கு வழங்கும் இழப்பீட்டை அதிகப்படுத்துங்கள், எங்கள் பகுதி மேம்பட வாய்ப்பளியுங்கள், எங்கள் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குங்கள் என்று கோரிக்கை வருமாயின் அது நியாயமே. ஆனால் இல்லாத காரணத்தை கற்பனையாக உருவாக்கி அதற்கு மக்களை படைதிரட்டி போராடி அணு உலையையே மூடு என்பது எந்தவிதத்தில் நியாயம் என்பது படித்த சுயசிந்தனையுள்ள யாவரும் உணர்ந்துள்ளனர். இதில் இன்னுமொரு செய்தி கவனிக்கத்தக்கது. குழந்தைகளை எல்லாம் இந்த போராட்டத்தில் ஈடுபடுத்துகிறார்கள். நன்கு வளர்ந்துவிட்ட நமக்கே சிந்திக்கவும் பிரச்னையை புரிந்துக்கொள்ளவும் திராணியில்லாத பொழுது, அந்த பிஞ்சு உள்ளங்களுக்கு என்னத்தெரியும்? இவர்கள் குழந்தைகளின் நெஞ்சில் நஞ்சை விதைப்பதோடு, அவர்களை போராட்டம் என்ற பெயரில் கொடுமைப்படுத்துகிறார்கள். இதை தவிர்க்க இயலும்.
நம் தலைவிதி! என்ன நடக்குமோ?

No comments:
Post a Comment